எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா

புதுச்சேரி : எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் விழா தட்டாஞ்சாவடி தொகுதி அ.தி.மு.க., சார்பில் நடந்தது.

விழாவிற்கு, தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார்.

எம்.ஜி.ஆர்., உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாநில துணைச் செயலாளர் நாகமணி, உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், முன்னாள் தொகுதி செயலாளர் தமிழ்செல்வன், மகளிர் அணி மாநிலச் செயலாளர் விமலாஸ்ரீ, பாஸ்கர், மாநில கலைப் பிரிவு துணைச் செயலாளர் தயாளன், மாநில ஜெ., பேரவை பொருளாளர் மலர் மன்னன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement