மதுக்கடையை அகற்றக்கோரி முற்றுகை

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி ஊராட்சி சின்னசெம்மேட்டுப்பட்டி மதுக்கடை ஊருக்கு ஒதுக்குப்புறமாக மலையடிவாரத்தில் இருப்பதால் அங்கேயே குடிக்கின்றனர்.

விவசாயப் பணிகளுக்காக செல்லும் பெண்களிடம் சிலர் வரம்பு மீறி நடந்து கொள்வதுடன், சிறுமிகளையும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுக்கின்றனர் என, கிராம மக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். நடவடிக்கை இல்லாததால் நேற்று மதியம் கடையை முற்றுகையிட்டனர்.

உத்தப்பநாயக்கனுார் எஸ்.ஐ., மணிமொழி, தி.மு.க., வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி, டாஸ்மாக் அதிகாரிகள் சமரசம் பேசினர். பிப்.5க்குள் கடை வேறு பகுதிக்கு மாற்றப்படும். அதுவரை கடை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Advertisement