கீழ்பரிக்கல்பட்டு பூண்டியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்

பாகூர் : கீழ்பரிக்கல்பட்டு பூண்டியம்மன் கோவிலில், தை மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, 108 பால் குட அபிஷேகம் நடந்தது.

பாகூர் அடுத்த கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூண்டியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில், நேற்று தை மாத முதல் வெள்ளிக் கிழமையையொட்டி, பூண்டியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது.

முன்னதாக, விரதம் இருந்து வந்த பெண்கள், கீழ்பரிக்கல்பட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து பால் குடங்களை தலையில் சுமந்து வீதியுலாவாக சென்று பூண்டியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் செய்யப்பட்டு, 12.00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement