ஆடு திருடிய 2 பேர் கைது

காரைக்கால் : காரைக்கால், நெடுங்காடு குரும்பரம் கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் அம்பேத்கர்; கூலி தொழிலாளி. இவர் 15 ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 14ம் தேதி இரவு ஆடுகளை வீட்டு வாசலில் கட்டியுள்ளார். மறுநாள் காலை பார்த்தபோது ஒரு ஆட்டை காணவில்லை.

அவர், தேடியபோது, கன்னிகோவில் பின்புறம் உள்ள வாய்க்கால் கரையில் காணாமல் போன ஆட்டின் தலை, தோல், நான்கு கால்கள் கிடந்தன.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், நெடுங்காடு போலீசார் வழக் குப் பதிந்து விசாரித்தனர்.

அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டியன் மகன்கள் ராஜவேலு, 24, ராஜமுத்து, 19, ஆகியோர் ஆடுகளை திருடியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement