பொங்கல் பண்டிகை மதுபான விற்பனையில் திருச்சி டாப்!

சென்னை; தமிழகத்தில் பொங்கல் மதுபான விற்பனையில் திருச்சி மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.



பண்டிகை நாட்கள், விழாக்காலங்களில் டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை களைகட்டும். அதேபோல கடை விடுமுறை நாட்களின் போது முன்கூட்டியே மது பிரியர்கள் திட்டமிட்டு மதுவை வாங்கி இருப்பு வைத்துக் கொள்வது வழக்கம்.


தற்போது பொங்கல் பண்டிகை முடிந்துவிட்ட நிலையில், தமிழகம் முழுவதும் எத்தனை கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனையாகி இருக்கின்றன என்ற விவரம் வெளியாகி உள்ளது.


தமிழகம் முழுவதும் ஜன.13ம் தேதி முதல் ஜன.16ம் தேதி வரை பொங்கல் விடுமுறையில் 725.56 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்தாண்டை ஒப்பிடுகையில் ரூ. 46 கோடி அதிகம் ஆகும்.


மது விற்பனையில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் மதுரை இம்முறை பின் தங்கியுள்ளது. அங்கு ரூ.149.55 கோடிக்கு தான் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. பொங்கல் பண்டிகை மதுபான விற்பனையில் இந்தாண்டு திருச்சி மாவட்டம் ரூ,179 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.


சேலம் மாவட்டம் ரூ.151.60 கோடி விற்பனையை எட்டி இரண்டாம் இடத்தில் இருக்கிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.142 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

Advertisement