சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பு ரோகித் மீண்டும் கேப்டன்; ஷமிக்கு வாய்ப்பு

4


மும்பை: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., வெளியிட்டுள்ளது.


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், இந்திய அணி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.


ஐ.சி.சி.,யிடம் பெற்ற கால அவகாசத்திற்கு பிறகு, 12ம் தேதியே அறிவிக்கப்பட வேண்டிய வீரர்களின் பட்டியலை பி.சி.சி.ஐ., இன்று வெளியிட்டுள்ளது.
பல்வேறு விமர்சனங்கள், எதிர்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் ரோகித் ஷர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல, காயத்தில் இருந்து மீண்டு வந்த முகமது ஷமிக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.


சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் விபரம் இதோ,

ரோகித் சர்மா, கேப்டன்


சுப்மன் கில், துணை கேப்டன்


விராட் கோலி


ஸ்ரேயாஸ் ஐயர்


கே.எல்.ராகுல்


ஹர்திக் பாண்டியா


அக்சர் பட்டேல்


வாஷிங்டன் சுந்தர்


குல்தீப் யாதவ்


ஜஸ்ப்ரீத் பும்ரா


முகமது ஷமி


அர்ஷ்தீப் சிங்


ஜெய்ஸ்வால்


ரிஷப் பந்த்


ரவீந்திர ஜடேஜா


காயத்தால் அவதிப்பட்டு வரும் பும்ரா, உடல் தகுதி நிரூபித்த பிறகே, அணியில் தொடர்வாரா? இல்லையா? என்பது தெரிய வரும்.

Advertisement