அண்ணாமலை பேட்டி
தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட ஒன்பது இடங்களில் ஒரே நாளில் பைக் திருட்டு, செயின் பறிப்பு சம்பவம் நடந்திருப்பது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர், சீருடையில் இருக்கும்போதே, அவரது கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பறித்து சென்றிருக்கின்றனர்.
தி.மு.க., ஆட்சியில், பெண் காவலரிடமே செயின் பறிப்பு நடக்கும் அளவுக்கு, மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கி இருக்கிறது. அதிகார துஷ்பிரயோகங்களை கைவிட்டு, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் அரசு ஈடுபட வேண்டும்.
- அண்ணாமலை
தமிழக பா.ஜ., தலைவர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement