தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை; அதிகபட்ச மழை எங்கே?

1

சென்னை: தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 12 செ.மீ மழைப் பதிவாகி உள்ளது.

சென்னையில் கிண்டி, நுங்கம்பாக்கம் கிளாம்பாக்கம், தாம்பரம், கிண்டி, அடையாறு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான கால சூழல் நிலவியது. அதேபோல், தென்மாவட்டமான தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் மழை கொட்டியது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், அச்சன்புதூர், ஆலங்குளம், கழுநீர்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபேட்டை, நெமிலி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

அதிகபட்ச மழை எங்கே?




தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று காலை 8.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 12 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


பொன்னேரி- 7 செ.மீ,


செங்குன்றம்- 5 செ.மீ,

மீனம்பாக்கம்- 4 செ.மீ.,

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு



இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 19 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement