பட்டாசு பறிமுதல் இருவர் கைது

சாத்துார்: திருத்தங்கல் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ஹரி கணேஷ், 25.சத்திரப்பட்டி சுடுகாட்டு பகுதியில் தகர செட்டு அமைத்து பேன்சி ரக பட்டாசு தயாரித்தார்.

இரவார்பட்டியை சேர்ந்தவர் வீர கணேசன், 47.அங்குள்ள காளியம்மன் கோயில் தெருவில் தகர செட் அமைத்து பேன்சி ரக பட்டாசு தயாரித்தார். ரோந்து சென்ற போலீசார் இருவரிடமிருந்தும் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement