நிதிக்குழு பரிந்துரையை விட குறைவாக தான் கடன் வாங்கினோம்: சொல்கிறார் அமைச்சர்

1

விருதுநகர்: விருதுநகரில் நிருபர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழகத்தின் நிதி நிலை குறித்து இ.பி.எஸ்., தவறான தகவலை கூறியுள்ளார். பரபரப்பை ஏற்படுத்துவதற்காக, தமிழகம் நிதிநிலை திவால் ஆகப் போகிறது என்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டை கூறியது வருந்தத்தக்கது மட்டுமல்ல. வேடிக்கையாகவும் உள்ளது. பொருளாதாரம் குறித்து நிதி மேலாண்மை குறித்தும் எந்த ஒரு அடிப்படை அறிவு இல்லாதவர்கள் தான் இப்படிப்பட்ட ஒரு அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கடன்அளவுகளில் அரசு மீது வைக்க முடியும்.


தி.மு.க., அதிக கடன் வாங்கியதாக இ.பி.எஸ்., கூறுகிறார். இதுவும் அடிப்படை புரிதல் இல்லாததுதான். இது குறித்து ஏற்கனவே சட்டசபையில் விளக்கம் அளித்து இருந்த போதும், மக்கள் மத்தியில் தவறான தகவலை பதிய வைக்க முயற்சி செய்கிறார்.


15வது நிதிக்குழு 2021 -22ல் 28.7 சதவீதம் கடன் வாங்கலாம் எனக்கூறியிருந்தது. ஆனால், 27.01 சதவீதம் கடன் வாங்கி உள்ளோம்.
2022 -23ல் நிதிக்குழு 29.03 சதவீதம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், 26.87 சதவீதம் வாங்கி உள்ளோம்.
2023-24 ல் 20.01 சதவீதம் பரிந்துரை செய்திருந்தது. 26.72 சதவீதம் தான் வாங்கி இருந்தோம்
2024 -25ல் 28.09சதவீதம் என பரிந்துரை செய்திருந்தது. 26.4 சதவீதம் தான் கடன் வாங்கி உள்ளோம்.

திமுக ஆட்சியில், நிதிக்குழு என்ன பரிந்துரை செய்துள்ளதோ, அதற்கு உட்பட்டு தான், அதற்கு குறைவாக தான் கடன் அளவை பராமரித்து வருகிறோம். இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமான மஹாராஷ்டிராவும் வாங்கி உள்ளது. கடன் வாங்கக்கூடிய காலத்தில் வாங்கக்கூடிய கடனை எப்படி திரும்ப செலுத்துவதும், வரம்புக்குள் நாம் கடன் வாங்கி உள்ளோமா என்பதும் தான் முக்கியம்.தமிழகத்தின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது.

நிதி மேலாண்மையில் நுட்பமாக செயல்படுகிறோம்.நிதி ஆதாரம், நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது.
தொடர்ச்சியான இயற்கை பேரிடர்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி வரவில்லை. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு தான் அதிக நிதி ஒதுக்குகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. பல திட்டங்களை மாநில அரசு சொந்தநிதியில் இருந்து செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்திற்கான நிதிப் பகிர்வை மத்திய அரசு தருவது கிடையாது. ஜிஎஸ்டி நிதி பகிர்வை மத்திய அரசு செய்துள்ளது. பா.ஜ., மற்றும் கூட்டணி ஆட்சி செய்யும் உ.பி., பீஹார், ம.பி., மாநிலங்களுக்கு 40 சதவீதம் வாங்கி உள்ளது
உபி,க்கு39ஆயிரம் கோடியும்
பீகார் 17, 403 கோடியும்
மபி.,க்கு 13,582 கோடியும் வழங்கி உள்ளது.

தென் மாநிஙலங்கள் தமிழகம் ஆந்தரா கேரளா 15சதவீதம் (ரூ.27.136 கோடி) தான் கிடைத்துள்ளது.தமிழகத்திற்கு மட்டும் 7,057 கோடி மட்டும் தான் கொடுத்துள்ளது. நிதி பகிர்வில் தென் மாநிலங்களை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

மத்திய அரசால் நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், நிதி நிலைமையை திறமையாக கையாண்டு வருகிறது.
தமிழகத்திற்கு உரிய நிதிப் பகிர்வை அளிக்க வேண்டும். மாநிலங்களுக்கு உரிய நிதிப்பகிர்வை தர வேண்டும். மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும்.

பரந்தூர் விமான நிலையங்கள் உருவாக்குவது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில், சென்னை விமான நிலையம் சிறியதாக இருக்கிறது. தற்போதுள்ள விமான நிலையத்தை விரிவுபடுத்தினாலும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது ஒன்றும் செய்ய முடியாது. விமான நிலையத்தை சுற்றி நகர்ப்புறமாகிவிட்டதால், அங்கு எதுவும் செய்ய முடியாது.

பரந்தூருக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். அவர்களின் குறைகளை கேட்டு, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால், தீர்வு காண முயற்சிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement