4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: நெல்லைக்கு ஆரஞ்சு அலெர்ட்!
சென்னை: கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜன.,19) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, நுங்கம்பாக்கம் கிளாம்பாக்கம், தாம்பரம், கிண்டி, அடையாறு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது.
இந்நிலையில், மழை குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜன.,19) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், நெல்லைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 23ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஜன.,20ம் தேதி காலை லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தில் ஜன.,24,25ல் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (1)
MARI KUMAR - TIRUNELVELI,இந்தியா
19 ஜன,2025 - 15:47 Report Abuse
வானிலை மையம் கூறியது போல் பல இடங்களில் மழை பெய்து வருகிறது
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement