டேங்கர் வெடித்து விபத்து; நைஜீரியாவில் 70 பேர் பரிதாப பலி

டாகர்: நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்து 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



நைஜீரியாவில் சுலேஜா என்ற பகுதியில், சட்டவிரோதமாக ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு எரிபொருள் மாற்றும் பணி நடந்துள்ளது. அப்போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்,70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடல்கள் உரு தெரியாமல் கருகிப் போயுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் நிலவுகிறது.

பொது மக்கள் அதிகம் கூடியிருந்த இடத்தில், சட்டவிரோதமாக எரிபொருள்கள் மாற்றும் போது விபத்து ஏற்பட்டுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் இதே மாதிரியான விபத்தில் 170 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பித்தக்கது.

Advertisement