கார்டு பயன்பாட்டில் புதிய போக்கு

கிரெடிட் கார்டு பயன்பாட்டில் புதிய போக்காக, மெட்ரோ அல்லாத நகரங்களில் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்வது அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில், மெட்ரோ அல்லாத நகரங்களில் கிரெடிட் கார்டு செலவீனம், கடந்த ஆறு ஆண்டுகளில் 175 சதவீதம் அதிகரித்துள்ளது என, கிரெடிட் கார்டு நிறுவனம் விசா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. மெட்ரோ நகர பயன்பாட்டைவிட இது நான்கு மடங்கு அதிகம் ஆகும்.

தமிழ்நாட்டின் திருச்சி, திருப்பூர் மற்றும் புவனேஷ்வர், ஜெய்பூர் உள்ளிட்ட நகரங்கள் இந்த புதிய போக்கில் முன்னிலை வகிக்கின்றன. நுகர்வோரின் மாறிவரும் பழக்க வழக்கங்கள் இதற்கு முதன்மை காரணமாக அமைந்துள்ளன.

மேலும், எளிய பரிவர்த்தனை, உள்ளூர் மொழிகளில் சேவை, பரிசுப்புள்ளிகள் உள்ளிட்ட அம்சங்களும் கிரெடிட் கார்டு பயன்பாட்டிற்கு வலு சேர்த்துள்ளன.

இந்த பகுதிகளில் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. எனினும் வேகமான வளர்ச்சியை மீறி இந்த நகரங்களில் கிரெடிட் கார்டு பரவலாக்கம் குறைவாகவே உள்ளது. இது, பிரத்யேக கிரெடிட் கார்டுகளை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

Advertisement