நெடுஞ்சாலையில் மழைநீர் குண்டும், குழியுமான சாலை

திருத்தணி:திருத்தணி- சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரம் வாகனங்கள் சென்றவாறு இருக்கும். குறிப்பாக, பேருந்துகள், வேன்கள், கார், இரு சக்கர வாகனங்கள் உள்பட கனரக வாகனங்களும் இரவு, பகலாக செல்லும்.

இந்நிலையில் திருத்தணி அமிர்தாபுரம் கிறிஸ்துவ தேவலாயம் அருகே மாநில நெடுஞ்சாலையில் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் ஊற்றாக ஓடும். கடந்த ஒன்றரை மாதம் முன்பு பெய்த பெஞ்சல் புயல் மழையால் மேற்கண்ட நெடுஞ்சாலையில் தண்ணீர் தொடர்ந்து சாலை மீது சென்றது.

இதனால் அப்பகுதியில் சாலை, குண்டும், குழியுமாக மாறியுள்ளன. நேற்று பெய்த மழையால் மேலும் சாலை சேதமடைந்ததால், அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயத்துடன் செல்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைத்தும், மழைநீர் செல்வதற்கு வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.

Advertisement