மாட்டுத்தொழுவமான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அச்சம்

திருவாலங்காடு:திருவள்ளூர் -- -அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் 24 கி.மீ., நீளம் கொண்டது. இச்சாலையில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது திருவாலங்காடு கிராமம்.

இங்கு தேரடி அருகே நெடுஞ்சாலையில் சிலர் கால்நடைகளை கட்டி வைத்து மாட்டு தொழுவமாக மாற்றியுள்ளனர். சாலையை ஒட்டி தங்கள் கால்நடைகளை கட்டி வைப்பதால், அவை சாலையில் படுத்து கொள்கின்றன. திடீரென வாகனங்கள் வரும் போது எழுந்து சாலையில் செல்கின்றன.

இதனால் சாலையில் வேகமாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் கால்நடைகளை கட்டி வைப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement