விருதுநகர் எஸ்.பி., விளக்கமளிக்க எஸ்.சி., ஆணையம் உத்தரவு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் தனியார் மருத்துவமனை டாக்டர், நர்ஸூக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைதான நிலையில் டாக்டரின் புகாரின்பேரில் நர்ஸ் குடும்பத்தினர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி நர்ஸ் அனுப்பிய கடிதம் தொடர்பாக எஸ்.பி., விளக்கமளிக்க தேசிய எஸ்.சி., ஆணையம் உத்தரவிட்டது.

சாத்துாரில் தனியார் மருத்துவமனை டாக்டர் ரகுவீர் அங்கு பணிபுரியும் நர்ஸ்சுக்கு 2023 ல் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. இப்புகாரில் டாக்டர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் டாக்டர் நர்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தனியாக புகார் அளித்தார். இப்புகாரில் நர்ஸ் குழந்தைகளுக்கு அளித்த சிகிச்சையின் போது மருத்துவ விதிகளில் அசட்டையாக நடந்து கொண்டதற்கு திட்டியதாகவும், அவரது குடும்பத்தினர் தன் மீது தாக்கியதாகவும் டாக்டர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து சாத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி நர்ஸ் எஸ்.சி., ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார். இக்கடிதம் தொடர்பாக 15 நாட்களுக்குள் எஸ்.பி., கண்ணன் பதிலளிக்க தேசிய எஸ்.சி., ஆணைய இயக்குனர் ரவிவர்மன் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

Advertisement