டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபியை கைப்பற்றிய கேரளா அணி
திருப்பூர்,: திருப்பூரில் நடந்த டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் இறுதி போட்டியில், கேரளா, ஆர்.எஸ்.சி., எஸ்.ஜி., அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
திருப்பூர் 'ஸ்கூல் ஆப் கிரிக்கெட்', அகில இந்திய கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. 16 வயதுக்கு உட்பட்ட, எட்டு அணிகள் பங்கேற்றன. 12ம் தேதி முதல் லீக் போட்டிகள் நடந்தது. அரையிறுதி போட்டியில் வென்று, திருப்பூர் - கேரளா அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
நேற்று மாலை நடந்த இறுதிபோட்டியில், கேரளா, ஆர்.எஸ்.சி., எஸ்.ஜி., அணி டாஸ் வென்று, பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி, 30 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 133 ரன் எடுத்தது. தர்ஷன் ரெட்டி, 25 பந்துகளில், 28 ரன் எடுத்தார். நிதிலன் 32 ரன் எடுத்தார்.
வெற்றிக்கான இலக்கை விரட்டிய, கேரளா, ஆர்.எஸ்.சி., எஸ்.ஜி., அணி விளையாட துவங்கிய நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால், டி.எல்.எஸ்., (டக்வர்த் லீவீஸ்) விதிப்படி, 22 ஓவரில், 96 ரன் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 20.1 ஓவரில், இரண்டு விக்கெட்டுகளை இழந்த, கேரளா அணி, 96 ரன் எடுத்து வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது.
இறுதி போட்டியில், ஆர்.எஸ்.சி., எஸ்.ஜி., அணி பேட்ஸ்மேன் சச்சின்அருண், 39 ரன் எடுத்து, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் பேட்ஸ்மேன் அபிநந்தன் தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாகவும், பவுலர் தர்ஷன்ரெட்டி சிறந்த பவுரலாகவும் தேர்வு செய்யப்பட்டனர். தொடர் நாயகன் விருது நிதிலனுக்கு வழங்கப்பட்டது. கேரளா, ஆர்.எஸ்.சி., எஸ்.ஜி., அணி அத்வைத் ஐயர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற அணிக்கு, இந்திய அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன்ஸ்ரீராம் கோப்பை வழங்கினார். திருப்பூர் 'ஸ்கூல் ஆப் கிரிக்கெட்' அணி நிர்வாகிகள் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
கோவா அணி மூன்றாமிடம்
முன்னதாக காலையில், ைஹதராபாத் கோச்சிங் பியாண்ட் அணி - கோவா, ஸ்பார்க்கிளிங் ஸ்டார்ஸ் அசோசியேஷன் அணி இடையே மூன்றாவது இடத்துக்கான போட்டி நடந்தது. டாஸ் வென்ற கோவா அணி, 15 ஓவரில், ஆறு விக்கெட இழப்புக்கு, 92 ரன் எடுத்தது.
எளிய இலக்கை விரட்டிய ைஹதராபாத் அணி, 14 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளை இழந்து, 70 ரன்களுக்கு 'ஆல்அவுட்'டானது. 22 ரன்கள் வித்தியாசத்தில் கோவா அணி வெற்றி பெற்றது. மூன்று ஓவர் வீசி, 21 ரன் கொடுத்து, மூன்று விக்கெட் கைப்பற்றிய, அனிஷ் ஹர்மல்கர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.