விருதுநகர் உணவுத்திருவிழா நிறைவு

விருதுநகர்: விருதுநகரில் நேற்றுடன் உணவுத்திருவிழா நிறைவடைந்தது. விடுமுறை நாள் என்பதால் நேற்று அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விருந்துடன் விருதுநகர் கார்னிவல் - 2025 என்ற இசையுடன் கூடிய உணவுத் திருவிழா ஜன. 17ல் துவங்கியது. இந்த உணவுத்திருவிழா ஜன. 17, 18 ஆகிய இரு நாட்கள், 60 அரங்குகளுடன் நடந்தது.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை என்பதால் விருதுநகர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் இரு நாட்களிலும் உணவுத் திருவிழாவில் பங்கேற்றனர்.

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் டூவீலர், கார் ஆகிய வாகனங்களால் இரவு நேரத்திலும் விருதுநகர் - மதுரை ரோட்டில் போக்குவரத்து நிறைந்து காணப்பட்டது.

மேலும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நேற்று (ஜன. 19) மட்டும் உணவுத்திருவிழா நீட்டிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து நேற்று நடந்த விருதுநகர் உணவுத்திருவிழா மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணியுடன் நிறைவடைந்தது. இதில் மக்கள் திரளாக பங்கேற்றனர்.

Advertisement