திருமூர்த்திமலையில் கன மழை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை

உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது.

உடுமலை, திருமூர்த்திமலைப்பகுதிகளில், கன மழை பெய்து வருவதால், மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணியர், பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மலையடிவாரத்திலுள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழக்கம் போல், பூஜைகள் நடந்தன. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் முதல், நேற்று காலை வரை, அமராவதி அணையில், 24 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. திருமூர்த்தி அணை - 8, மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் - 6, வரதராஜபுரம் - 14, பூலாங்கிணர் - 2, நல்லாறு - 18, உப்பாறு - 4 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.

Advertisement