மின் தொழிலாளர் சம்மேளன கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன வட்ட கிளை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு வட்ட தலைவர் ஜோதிவேல் தலைமை தாங்கினார். செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். பொருளாளர் முத்துக்குமார் வரவேற்றார். தொடர்ந்து சம்மேளனத்தின் நிர்வாகிகளுடன், துணை தலைவர் வேலு, இணை செயலாளர்கள் இப்ராஹிம், மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.

சம்மேளன கூட்டம் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். வரவு செலவு அறிக்கையினை கட்டாயம் அறிவிக்க வேண்டும். கூடுதலாக புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சட்ட ஆலோசகர் சக்திவேல் நன்றி கூறினார்.

Advertisement