சங்கராபுரம் பகுதியில் வெங்காயம் அறுவடை 'ஜரூர்'

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் சாம்பார் வெங்காயம் அறுவடை துவங்கி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த பாலப்பட்டு, அரசம்பட்டு, வடபாலப்பட்டு, தும்பை, பாச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் சாம்பார் வெங்காாயம் (சின்ன வெங்காயம்) அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.

நான்கு மாத பயிரான வெங்காயம் தற்போது நன்கு செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால், விவசாயிகள் அறுவடை பணிகளை துவங்கி உள்ளனர்.

சேலம், திருச்சி, திருவண்ணாமலை, வேலுர் ஆகிய ஊர்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் சங்கராபுரத்தில் முகாமிட்டு அறுவடை செய்யும் வெங்காயத்தை கிலோ ரூ.30 முதல் 40 வரை கொடுத்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு அறுவடை செய்யும் நாளிலேயே அலைச்சலின்றி கை மேல் காசு கிடைக்கிறது.

Advertisement