திருநெல்வேலியில் தனியார் பஸ்கள் தீக்கிரை!

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தனியார் பஸ்கள் தீக்கிரையாகின.



திருநெல்வேலி தச்சநல்லூரில் தனியார் பஸ் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்றிரவு வழக்கம் போல், 20 பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அப்போது, நிறுத்தப்பட்டிருந்த 20 பஸ்களில் திடீரென தீப்பற்றியது.


இரண்டு பஸ்கள் எரிந்து நாசமாகின. விரைந்து வந்து தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement