13 முதல் 18 வயது வரை., 59 ல் 57 பேர் கைது !

1


திருவனந்தபுரம்: கேரளாவில் 13 வயது முதல் 18 வயது வரை 62 பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டதாக அளித்த புகார் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பத்தினம்திட்டா மாவட்ட போலீஸ் அதிகாரி வினோத்குமார் கூறியதாவது:
தற்போது 18 வயது நிரம்பிய இளம்பெண் அளித்த புகாரில் இளவம்திட்டா போலீசில் முதல் வழக்கு பதியப்பட்டது. இதன்படி ஐபிஎஸ் அதிகாரி அஜீதா பேகம் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்தனர்.


இதில் பெண் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. பெண்ணின் அருகில் வசித்தவர்கள் மற்றும் புறபகுதிகளில் இருப்பவர் என தெரிய வந்தது. மொத்தம் 62 பேரில் 59 பேர் அடையாளம் கண்டறியப்பட்து. இன்று வரை 57 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் வெளிநாட்டில் இருப்பதாக தெரிகிறது. குற்றம் புரிந்தவர்களில் மைனர் சிறுவர்கள் 5 பேர் அடங்குவர்.

ரப்பர் தோட்டத்தில்





பெண் 12 ம் வகுப்பு படிக்கும் போது இன்ஸ்டாகிராமில் பழகிய இளைஞர் ஒருவர் பெண்ணை ரப்பர் தோட்டத்திற்கு அழைத்து சென்று சக நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். பெண்ணை பலர் தனியார் பஸ் ஸ்டாப் மற்றும் கார் உள்புறம், அரசு மருத்துவமனை அருகே இது போன்ற பகுதிகளுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Advertisement