முதல் நாள் முதல் கையெழுத்து என்ன: வெள்ளை மாளிகையில் கால் வைத்ததும் டிரம்ப் செய்யப் போவது இதுதான்!

8


வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபர் ஆகிய பிறகு, என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. அமெரிக்க சட்டப்படி, துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வேன்ஸ், முதலில் பதவியேற்பார். அவரை தொடர்ந்து, அதிபராக டிரம்ப் பதவியேற்பார். வெள்ளை மாளிகையில் கால் வைத்ததும் முதல் நாள் திட்டம் குறித்து, டொனால்டு டிரம்ப் கூறியதாவது:


* அனைத்து சட்டவிரோத எல்லை அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்.



* தேசிய எல்லையில் அவசரநிலையை அறிவிப்பேன்.



* தெற்கு எல்லையைப் பாதுகாக்க ராணுவத்திற்கு உத்தரவிடுவேன்.



* அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்.


* அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீதமும், கனடா மற்றும் மெக்சிகோ நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவின் பொருட்களுக்கு 60 சதவீதமும் வரி விதிக்கப்படும்.


* 'டிக் டாக்' செயலியை முடக்கி வைக்க வேண்டாம் என்று நிறுவனங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.



* சட்டத்தின் தடைகள் நடைமுறைக்கு வருவதற்கு, முன் கால அவகாசத்தை நீட்டிக்க நான் ஒரு நிர்வாக ஆணையை வெளியிடுவேன். நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க ஒப்பந்தம் செய்யலாம்.



* அமெரிக்காவில் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.


* டிக் டாக் செயலியை டிரம்ப் முடக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தடையை நீக்குவோம் என்று அறிவித்துள்ளார்.

Advertisement