தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே! இதோ முழு விபரம்!

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மலைப்பகுதியில் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 235 மி.மீ., மழை பொழிந்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று, திடீரென மிதமான மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பொன்னலூர்பேட்டை, பூண்டி, வேப்பம்பட்டு, கடம்பத்தூர் என பல பகுதிகளில் மழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மலைப்பகுதியில் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 235 மி.மீ., நாலுமுக்கு எஸ்டேட்டில் 222 மி.மீ., காக்காச்சியில் 209 மி.மீ., மாஞ்சோலையில் 162 மி.மீ., மழை பதிவானது இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதிக மழைப்பொழிவு எங்கே!




* ஊத்து- 235 மி.மீ,


* நாலுமுக்கு- 222 மி.மீ,



* காக்காச்சி- 209 மி.மீ


* மாஞ்சோலை- 162 மி.மீ,


* தங்கச்சிமடம்- 112.6 மி.மீ,


* ராமேஸ்வரம்- 97.5 மி.மீ


* மண்டபம்- 93 மி.மீ,


* பாம்பன்- 82.6 மி.மீ,


* வாலிநோகம்- 57 மி.மீ,


* பூண்டி - 56 மி.மீ,


* சூரங்குடி- 42 மி.மீ,


* திருத்தணி- 40 மி.மீ,


* ஆர்.கே.பேட்டை- 39 மி.மீ,


* தாமரைப்பாக்கம்- 36 மி.மீ,


* தாலுகா அலுவலகம், ஆரணி- 36 மி.மீ,

* சேர்வலாறு அணை- 35 மி.மீ,



* மொடக்குறிச்சி- 33 மி.மீ,


* காவேரிப்பாக்கம்- 32.4 மி.மீ,

குளிக்க தடை



திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை பகுதியில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளிலும் இன்று இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement