இன்றும் உயர்ந்தது தங்கம் விலை!


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தின் இறுதியில் குறைந்து காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.


சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது.


கடந்த வார இறுதியில் பவுனுக்கு ரூ.120 குறைந்திருந்த தங்கம் விலை, இன்று (ஜன.,20) அதிரடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ. 59,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ரூ.7,450க்கு விற்பனை ஆகிறது.


கடைசி 5 நாட்கள் தங்கம் விலை நிலவரம்;

15/01/2025 - ரூ.58,720

16/01/2025 - ரூ.59,120

17/01/2025- ரூ.59,600

18/01/2025 - ரூ.59,480

20/01/2025 - ரூ.59,600


கடந்த வாரம் ஏறுமுகமாக இருந்து வந்த தங்கம் விலை, சனிக்கிழமை குறைந்திருந்தது. இதனால், இந்த வாரம் மேலும் தங்கம் விலை சரியும் என்று எதிர்பார்த்திருந்த ஆபரண பிரியர்களுக்கு இன்றைய நிலவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement