காட்டிக் கொடுத்தது காப்பி பேஸ்ட் அறிக்கை; மாட்டிவிட்ட இ.பி.எஸ்., அட்மின் என்ன ஆவார்?
சென்னை: கனிமவளக் கொள்ளை தொடர்பாக நேற்றிரவு 10.10 மணிக்கு, அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையை, இன்று (ஜன.,20) 9.54 மணிக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
சமூக ஆர்வலர் ஜெபகர் அலி கொலையைக் கண்டித்து நேற்றிரவு 10.10 மணிக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது' என்று அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், இதே விவகாரத்தைக் கண்டித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., இன்று (ஜன.,20) காலை 9.54 மணிக்கு கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான வார்த்தைகள் அப்படியே காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அ.தி.மு.க., ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெபகர் அலி, சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது
கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட கலெக்டரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த அரசு.கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.
ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புகைப்படங்கள் இதோ!
அண்ணாமலை நேற்றிரவு 10.10 மணிக்கு வெளியிட்ட அறிக்கை!
இ.பி.எஸ்., இன்று (ஜன.,20) காலை 9.54 மணிக்கு வெளியிட்ட அறிக்கை
வாசகர் கருத்து (25)
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
20 ஜன,2025 - 13:12 Report Abuse
எடப்பாடி ஒரு வேஸ்ட் அல்லக்கை , ஓசி சோறு தலைவரா waiting list வாட்டர் BOY ஆஹ் தெரியல அப்புறம் இவர்கள் செயும் வேலைக்கு IMPORTANCE , ஸ்டாலின் சொன்ன மாதிரி DONT CARE
0
0
Reply
N.Purushothaman - Cuddalore,இந்தியா
20 ஜன,2025 - 13:07 Report Abuse
அ தி மு க ஐ டி விங் கோவை சத்யன் இருக்கும் வரை இப்படி ஒரு நிலை வந்ததில்லை ....எடப்பாடி வாரிசு அரசியலை சற்று தள்ளி வைக்காவிடில் கட்சி காணாமல் போகும் ....
0
0
Reply
Duruvesan - Dharmapuri,இந்தியா
20 ஜன,2025 - 12:16 Report Abuse
அட அல்லக்கைகளா, விடியல் தான் எஜமானர் அவருக்கு , அறிக்கை உடலைனா ரத்தத்தின் ரத்தம் சோகம், அறிக்கை உட்டா விடியல் கோவம். இப்போ தொண்டர் ஹாப்பி, விடியல் கிட்ட சார் அட்மின் எதையோ retweet தப்பா பண்ணிட்டான்னு சொல்லிடலாம். பழனி மூளை உள்ள பொழைக்க தெரிந்த அரசியல் வியாதி
0
0
Reply
Nallavan - ,இந்தியா
20 ஜன,2025 - 12:15 Report Abuse
கருத்தை மட்டும் காபி பேஸ்ட் செய்யுங்கோ, எல்லாம் ஒரு விளம்பரம்தான்
0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
20 ஜன,2025 - 12:13 Report Abuse
சுயமாக ஒரு அறிக்கை வெளியிட வக்கு கிடையாது . இந்த ஆசாமி எல்லாம் ஒரு கட்சி தலைவர் . கட்சி தான் செத்து பொய் பல வருடங்கள் ஆகிவிட்டதே இன்னும் அறிக்கை எதற்கு ?
0
0
Reply
nagendhiran - puducherry,இந்தியா
20 ஜன,2025 - 12:12 Report Abuse
பார்த்தும் தவறா படிக்கும் தத்தியை? விட காப்பி பேஸ்ட் ஒன்றும் கேவளம் இல்லை?
செய்தி உண்மையா பொய்யா? என்பதுதான் பார்க்கனும்?
0
0
raju - Madurai,இந்தியா
20 ஜன,2025 - 12:45Report Abuse
அரசியல் கட்சி தலைவர் .. இதற்கு முன் இருந்த தலைவர்கள் ..நிகழ்வுகளை உள்வாங்கி சொந்த கருத்தை தெரிவிப்பார்கள் . இதில் அவனை விட இவன் பெரியவன் என்று இரு தவறுகளை ஒப்பீடு செய்வது எப்படி ? அவரு தொல்காப்பியர் -கம்பர் மாதிரியா
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
20 ஜன,2025 - 12:10 Report Abuse
என்னதான் காப்பி, பேஸ்ட் செய்து திமுக ஆட்சியின் அவலத்தை வெளியிட்டாலும், அவர்கள் என்னவா திருந்தவா போகிறார்கள். திருந்தி, நல்லாட்சி கொடுப்பார்கள் என்பதெல்லாம் வெறும் கனவாகத்தான் இருக்கும். போய் வேற வேலையை பாருங்கள்.
0
0
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
20 ஜன,2025 - 13:11Report Abuse
இதை என்ன தான் கதறினாலும் ஒரு நாலு கார்பொரேட் களுக்கு லக்ஸ் கோடி கணக்கில் writeoff baddebts தள்ளுபடி , அனால் பல லட்சம் ஏழைகளுக்கு கொடுக்கப்படும் ஆயிர கோடி இலவசங்களுக்கு வயித்தெரிச்சல் அதுவும் 2000 ஆண்டு தட்சிணை இலவசம் வாங்கும் ஆரிய கூட்டம் சொல்லது இலவசம் waste
0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
20 ஜன,2025 - 12:01 Report Abuse
ஒரு அறிக்கை வெளியிட துப்பில்லாத ஒரு செத்த கட்சி. அதற்கு ஒரு உதவாக்கரை தலைவர்.கம்பராமாயணம் எழுதியவர் சேக்கிழார் என்று தன் பொதுஅறிவை பறைசாத்திய இந்த உதவாக்கரை பேர்வழி ஒரு கட்சி தலைவர். அந்த கட்சி நிச்சயம் விளங்கும் .
0
0
Reply
Shivam - Coimbatore,இந்தியா
20 ஜன,2025 - 11:56 Report Abuse
ரெண்டு பேருமே தலைசிறந்த கல்வி மற்றும் அறிவாற்றல் மிக்கவர்கள் மற்றும் ஆளுக்கு 10000, 20000 புத்தகங்கள் படித்த பண்டிதர்கள் , மேதைகள். இவர்களைப் பெற்றதற்கு தமிழ்நாடு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
0
0
nagendhiran - puducherry,இந்தியா
20 ஜன,2025 - 12:11Report Abuse
அறவேக்காடு? வாதம் செய்தி உண்மையா இல்லையா? காப்பியா? என்பதுதான்? செய்தி உண்மைதன்மை பற்றிதான்டா?
0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
20 ஜன,2025 - 11:53 Report Abuse
குற்றம் ஒண்ணு. .. copy past செய்தாலென்ன தவறு. ? கட்சியே திமுக விலிருந்து பிரிந்து வந்த Copy past தானே..
0
0
Reply
மேலும் 12 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement