சென்னை பஸ்களில் மாதாந்திர பயண அட்டை பெறும் கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை; சென்னையில் பஸ்களில் மாதாந்திர பயண அட்டை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.



தலைநகர் சென்னையில் மாநகர பஸ்களில் பயணிப்போர் மாதாந்திர பயண அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அட்டை மாதம்தோறும் 16ம் தேதி விநியோகிக்கப்படுவது வழக்கம்.


ஆனால் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக பலரும் இந்த பயண அட்டையை பெறாமல் உள்ளனர். இதையடுத்து, அவர்களின் வசதிக்காக பஸ் பயண அட்டை வரும் (ஜன) 24ம் தேதி வரை பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


ரூ.1000 பஸ் பயண அட்டை, மாணவர்களுக்கான 50 சதவீத சலுகை பயண அட்டை ஆகியவற்றையும் ஜன.24ம் தேதி மாநகர போக்குவரத்துக் கழக பயணச் சீட்டு விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement