பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்களால் திண்டுக்கல் மண்டலத்தில் 10 நாளில் ரூ.11.50 கோடி வசூல்
திண்டுக்கல்:பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்களால் 10 நாளில் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகத்திற்கு ரூ.11.50 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
பொங்கல் விடுமுறை நாட்களில் சென்னை திருச்சி மதுரை, கோவை திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திண்டுக்கல்,தேனி மாவட்டத்திற்கும் பண்டிகை முடிந்து திண்டுக்கல்,தேனி மாவட்டத்தில் இருந்து சென்னை கோவை திருச்சி விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திற்கும் பயணிகள் அதிக அளவில் செல்வார்கள். அவர்களின் வசதிக்காக திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் ஜன.10 முதல் ஜன.20 வரை 900 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் பயணிகள் சிரமமின்றி பொங்கல் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக குடும்பத்தோடு வெளி மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு குடி பெயர்ந்தனர்.
தற்போது மீண்டும் உங்கள் விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் முதல் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து சென்னை கோவை திருச்சி விழுப்புரம் திருப்பூர் தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களில் சென்றனர். அந்த வகையில் ஜன.10 முதல் நேற்று வரை 37.41 லட்சம் பயணிகள் பயணித்தனர். அவர்கள் மூலம் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகத்திற்கு ரூ.11.50 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இந்த சிறப்பு பஸ்களில் டிரைவர், கண்டக்டர்கள், அலுவலர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட 18000 பேர் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டனர்.