வீடு புகுந்து 7 சவரன் திருட்டு
சென்னை, பெருங்களத்துார், லட்சுமி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 38. செங்கல்பட்டில் உள்ள தனியார் மருந்துநிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
ஜன., 18ல், வீட்டை பூட்டி குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். நேற்று அதிகாலை வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ், உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 7 சவரன் நகை, 14,000 ரூபாய் மற்றும்வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து,பீர்க்கன்காரணை போலீசார்விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement