பஸ் பாஸ் விற்பனை வரும் 24 வரை நீட்டிப்பு
சென்னை, மாநகர போக்குவரத்து கழகத்தில் வழங்கப்படும் பயண அட்டை விற்பனை, வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்து கழம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாநகர போக்குவரத்து கழகத்தில், ஜன., 16ம் தேதி முதல் பிப்.,15ம் தேதி வரை பயணிக்க, 1,000 ரூபாய் பயண அட்டை, மாதந்தோறும் 1 முதல் 22ம் தேதி வரை பயணிக்கும் மாதந்திர பயண அட்டை, 50 சதவீத மாணவர் சலுகை பயண அட்டை ஆகியவை மாநகர போக்குவரத்து கழக டிக்கெட் விற்பனை மையங்களில் வழங்கப்படுகின்றன.
கடந்த 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகைக்காக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. எனவே, இந்த மாதம் மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்படும் அனைத்து வகையான பயண அட்டைகளும், வரும் 24ம் தேதி வரை விற்பனை செய்யப்படும். பயணியர் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement