தங்க கட்டிகள் வாங்கி தருவதாக மோசடி அரசு அதிகாரிகளாக நடித்த இருவர் கைது
சென்னை: தங்க கட்டிகள் வாங்கி தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, தில்லைநகர் முதல் கிராஸ், மேற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் பிரவீன், 38. திருச்சியில் உள்ள நகைக்கடை ஒன்றின் இயக்குனராக உள்ளார். தொழில் நிமித்தமாக திருச்சியில் உள்ள, ஜி.எஸ்.டி., அலுவலகத்துக்கு
சென்று வரும்போது, மயிலாடுது-றையை சேர்ந்த குருசம்பத்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்-டது. அவர் தன்னை ஆடிட்டர் எனக்கூறி அறிமுகமாகியுள்ளார். அவர் மூலமாக, புதுச்சேரியை சேர்ந்த லட்சுமிநாராயணன்
என்ப-வருடன் பிரவீனுக்கு தொடர்பு ஏற்பட்டது. வருமான வரித்து-றையில் பணிபுரிவதாக லட்சுமிநாராயணன் கூறியிருந்தார்.
இந்நிலையில், வங்கிகளில் தங்க கட்டிகளை மார்க்கெட் விலையி-லிருந்து, மிகவும் குறைவான விலைக்கு வாங்கித் தருவதாக இரு-வரும் பிரவீனிடம் தெரிவித்துள்ளனர். அதை உண்மை என நம்-பிய பிரவீன், 2021ம் ஆண்டு, 40
லட்சம் ரூபாயை ரொக்கமாக கொடுத்திருந்தார். ஆனால் உறுதியளித்திருந்தபடி, இருவரும் தங்க கட்டிகளை வாங்கித் தரவில்லை. மேலும் பிரவீன் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் அலைக்கழித்து வந்தனர். பிரவீன்,
பணத்தை தொடர்ந்து கேட்டதால், இருவரும் கொலை மிரட்டல் விடுத்தனர். அதிர்ச்சியடைந்த பிரவீன், சென்ன பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, யானை கவுனி போலீசார்
விசாரணை நடத்தியதில் குருசம்பத்-குமார், லட்சுமிநாராயணன் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பாடி மேம்பாலம் அருகே காரில் சென்றபோது குருசம்பத்குமார், லட்சுமிநாராயணன் ஆகியோரை
போலீசார் பிடித்தனர்.
அவர்கள் பயன்படுத்திய கார், அவர்களிடம் இருந்த மூன்று மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். இருவரும் தங்கள் காரில் உள்ள நம்பர் பிளேட்டில், அரசு வாகனங்களில் இருப்-பதை போன்று, 'அ' என்ற எழுத்தை
பயன்படுத்தி வந்தது கண்டு-பிடிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் சின்னத்துடன் கூடிய போலியான வி.ஐ.பி., பாஸ் தயாரித்து, காரின் முன் பகுதியில் ஒட்டி வைத்திருந்தனர். இந்த காரை பயன்படுத்தி, பலரிடம் நம்-பிக்கையை
வரவழைத்து தொடர்ந்து பல்வேறு மோசடி செயல்-களில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் மீது, ௭ பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்-களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
சிறையில் அடைத்தனர்.