பொங்கலுக்கு பின் சரிந்த அரளி விலை
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 700 ஹெக்டேரில் அரளி நடவு செய்யப்பட்டுள்ளது. தினமும் செடியிலிருந்து அறுவடை செய்து, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்ப-னைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கார்த்திகை, மார்கழியில் அரளிக்கு நல்ல விலை கிடைத்தது. அதி-கபட்சமாக ஒரு கிலோ, 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்-டது. தற்போது, பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் அரளி விலை சரிந்துள்ளது. சேலத்தில்
கடந்த, 13ல், ஒரு கிலோ சாதா அரளி, 340 ரூபாய், மஞ்சள், செவ்வரளி தலா, 450 ரூபாய்க்கு விற்-கப்பட்டது. 14ல், சாதா, 140, மஞ்சள், செவ்வரளி தலா, 240, 15ல், சாதா 70, மஞ்சள், செவ்வரளி தலா, 150, 16ல், சாதா 80,
வெள்ளை, செவ்வரளி தலா, 200, 17, 18ல், சாதா, 70, மஞ்சள், செவ்வரளி தலா, 150, 19ல், சாதா 80, வெள்ளை,செவ்வரளி தலா 200, நேற்று சாதா 60 ரூபாய், வெள்ளை, செவ்வரளி தலா, 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து, விவசாயிகள் கூறுகையில்,'' பனிப்பொழிவு சற்று குறைந்து வெயில் அடிப்பதால், அரளி விளைச்சல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால், விலை குறைந்து வருகிறது,' என்-றனர்.