ஈஷா மையத்திற்குஎதிராக வழக்கு

மதுரை : மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: கோவை ஈஷா யோகா மையத்தில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என டி.ஜி.பி., மதுரை போலீஸ் கமிஷனர், அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எம்.நிர்மல்குமார் விசாரணையை இன்று (ஜன.22) ஒத்திவைத்தார்.

Advertisement