அதிவேகத்தில் செல்லும் பள்ளி வாகனங்கள் ஆய்வு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அதிவேகத்தில் செல்லும் பள்ளி வாகனங்கள் குறித்து வெளியான செய்தியை எடுத்து போக்குவரத்து ஆய்வாளர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து எச்சரிக்கை செய்தார்.

அருப்புக்கோட்டையில் காலை மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் மாணவர்களை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக செல்கின்றனர். நகரின் ரோடுகள் மோசமாக இருக்கின்ற நிலையில் பள்ளி வாகனங்கள் வேகமாக செல்வதை கண்டு பெற்றோர் பயப்பட்டனர்.

இதுகுறித்தான செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதையடுத்து நேற்று முன்தினம்மாலை அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் நான்கு வழிச்சாலையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கண்ணன் அலுவலர்களுடன் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார். இதில் நான்கு வழி சாலையில் உள்ள தனியார் பள்ளியின் வாகனங்கள் வேகமாக வந்ததையடுத்து நிறுத்தி ஓட்டுநர்களை வரவழைத்து எச்சரிக்கை விடுத்தார். நகருக்குள் மிதமான வேகத்தில் செல்ல அறிவுறுத்தினார். மீண்டும் இது போன்று நடந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.

Advertisement