விஷ்வ ஹிந்து பரிஷத் பண்பு பயிற்சி முகாம்
கள்ளக்குறிச்சி : வடதொரசலுாரில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பண்பு பயிற்சி முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், வடதொரசலுார் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் இரண்டு நாள் பண்பு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட செயலாளர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சிவராஜ் முன்னிலை வகித்தார்.
மாநில அமைப்பு செயலாளர் ராமன், மாநில சமய வகுப்பு அமைப்பாளர் வீரராகவன், சமுதாய நல்லிணக்க மாநில அமைப்பாளர் லட்சுமி நாராயணன், பூஜாரிகள் பேரமைப்பு மாநில செயலாளர் அம்மணி அம்மன் ரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் கொள்கை மற்றும் ஹிந்து மக்களால் காக்கப்பட வேண்டிய நாட்டின் கலாச்சாரம், ஆன்மிகம், தேச பக்தி குறித்து விளக்கினர்.
மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் 50 பேர் உட்பட பலர் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட இணை செயலாளர்கள் வேலு, பிரேம்குமார், மாவட்ட பசு பாதுகாப்பு அமைப்பாளர் திருமாலழகன் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.
மாத்ரு சக்தி மாவட்ட அமைப்பாளர் மங்கலம் நன்றி கூறினார்.