ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்படும் பயணியர் நிழற்குடை: ஆணையர் ஆய்வு
புதுச்சேரி : புதுச்சேரியில் ஸ்மார்ட் திட்டத்தில் கட்டப்படும் பயணியர் நிழற்குடையை ஆணையர் சிவகுமார் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியின் கீழ் மூன்று கோடி ரூபாய் செலவில் 15 பஸ் நிறுத்த இடங்களில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நிழற்குடையும் 8 1/4 அடி உயரம், மூன்று அடி நீளம், ஆறடி அகலத்தில் கட்டப்பட்டு வருகிறது.
இதன் உட்புறத்தில் நான்கு டிஜிட்டல் டிஸ்பிளேக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் முதல் டிஸ்பிளேவில் புதுச்சேரி வரைபடம் (டூரிஸ்ட் மேப்) அமைக்கப்படுகிறது.
இரண்டு டிஸ்பிளேகளில் வணிக நிறுவனங்களில் விளம்பரங்கள் செய்யப்படும். நான்கவது டிஸ்ப்ளேவில் புதுச்சேரி அரசின் நல திட்டங்கள் குறித்த விளம்பரங்கள் செய்யப்படும்.
மேலும் 8 பேர் அமர்வதற்கான இருக்கை, இரண்டு கண்காணிப்பு கேமரா, அந்த பஸ் ஸ்டாப்பிற்கு வரும் பஸ்களின் வருகை குறித்த அறிவிப்பு டிஸ்ப்ளே உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. தட்டாஞ்சாவடி தொழில்பேட்டை வாயில் பகுதியில் அமைக்கப்படும் நிழற்குடையை புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவகுமார், துணை ஆணையர் குமரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.