சர்வதேச மன எண் கணித போட்டி வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ராமநாதபுரம் : புதுடில்லியில் ஆக்மாஸ் ( UCMAS) சார்பில் நடந்த சர்வதேச அபாகஸ் மன எண் கணிதப்போட்டியில் வென்ற ராமநாதபுரம் மாணவர்களை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
கடந்த 2024 டிச., 14, 15ல் ஆக்மாஸ் சார்பில் புதுடில்லியில் நடந்த சர்வதேச மன எண் கணித போட்டியில் 38 நாடுகளில் இருந்து 6012 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ராமநாதபுரம் சைன் அகாடமி மாணவர்கள் கிர்த்துன் மற்றும் ஆயிஷா சித்திகா ஆகியோர் சர்வதேச அளவில் சாம்பியன் பட்டம் வென்றனர். மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் ஜெகத், லக்சன் ராஜ் ஆகியோர் முதலிடம், தருண் கார்த்திக், தருண் தேஜாஸ், நிவின் யாதுவா, முகமது ஜாஹிரா ஆகியோர் 2ம் இடம் பெற்றனர்.
மாணவர்களை கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் கலோன் பாராட்டி ஊக்கப்படுத்தினார். சர்வதேச அளவில் ஆக்மாஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சைன் அகாடமி நிர்வாகிகள் சமீன் இம்தியாஜ் அகமது, பர்வின் பானு ஆகியோரை கலெக்டர் உட்பட பலர் பாராட்டினர்.