அணுக்கருவியல் விபத்து குறித்து பெரியகாலாப்பட்டில் ஒத்திகை
புதுச்சேரி : பெரிய காலாப்பட்டில், ரசாயன உயிரியல் கதிரியக்க அணுக்கருவியல் விபத்து முன்னெச்சரிக்கை குறித்து, பேரிடர் மேலாண்மை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பேரிடர் மேலாண்மை துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் சொலாரா ஆக்டிவ் பார்மா சயின்ஸ் நிறுவனம் இணைந்து, ரசாயண உயிரியல் கதிரியக்க அணுக்கருவியல் விபத்து முன்னெச்சரிக்கை குறித்து, ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பெரிய காலாப்பட்டு, சொலாரா ஆக்டிவ் பார்மா சயின்ஸ் நிறுவனத்தில் நேற்று மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில், மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு, போலீஸ், சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் சேர்ந்த அதிகாரிகள் அவசரகால தயார் நிலையை ஏற்படுத்தி ஒத்திகையில் ஈடுபட்டனர்.
மேலும், கதிரியக்க அணுக்கரு விபத்து தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.