திருக்கோவிலுார் ஒன்றியத்தில் கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார்.

திருக்கோவிலுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டனந்தல் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியலை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து சொறையப்பட்டு ஊராட்சியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 3.74 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மயான பாதை மற்றும் கழிவு நீர் வடிகால் வாய்க்கால், வீடுகள் பழுது பார்க்கும் பணியினை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திருக்கோவிலுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை குறித்து ஆய்வு பணிகளை விரைவாக முடிக்கவும், தரமான கட்டுமான பொருட்களைக் கொண்டு கட்டவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது பி.டி.ஓ., கள் நடராஜன், செல்வகணேஷ், ஒன்றிய பொறியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Advertisement