கும்ப மேளாவில் கலக்கும் பாகுபலி சாமியார்!
வாரணாசி: உபி.,யில் கொண்டாடப்பட்டு வரும் கும்பமேளாவில் பங்கேற்க வந்த ரஷ்யாவை சேர்ந்த பிரபல சாமியாரை பலரும் வியந்து பார்த்து சமூகவலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், மஹா கும்பமேளா பிப்.,26 (மஹாசிவராத்திரி) வரை நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடத்தப்படுகிறது. சிறப்பாக, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கிரகங்கள் நேர்கோட்டில் சேரும்போது நடக்கும் சிறப்பு மகா கும்பமேளாவாகும்.
45 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து 50 கோடிக்கும் மேல் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாள்தோறும் பலநாடு, பல மாநில மக்கள் வந்து முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சரபு நதியில் புனித நீராடி வருகின்றனர். வித்தியாமான, சிலர் இந்த விழா மூலம் பிரபலம் அடைகின்றனர். மத்திய பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த பாசி மணி, ருத்ராட்சை மாலை விற்கும் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரபலமாக பேசப்பட்டார். அவரின் அழகும், காந்த கண்களும் பலரை கவர்ந்திழுத்தது. இது சமூக வலைதளங்களில் பிரபலமானது.
தற்போது ரஷ்யாவில் இருந்து வந்த கம்பீரமாக தோற்றமளிக்கும் ஒரு சாமியார் பலராலும் வியந்து பார்க்கப்படுகிறார். நல்ல உயரம் மற்றும் ஆணழகன் போல விரிந்த மார்பு, புஜம், நீள தாடி, குடுமி, தடித்த ருத்ராட்ச மாலை என போன்றவற்றுடன் காட்சி அளிக்கிறார். இவரை பலரும் சமூக வலை தளங்களில் " பாகுபலி பாபா " என்று வர்ணித்து வருகின்றனர்.
ரஷ்யாவில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் கூறியதாவது: "ஹிந்து தொடர்பான சனாதன தர்மம், ஹிந்துயிசம் தன்னை ஈர்த்தது . நேபாளம் மற்றும் பல நாடுகளுக்கு புனித யாத்திர சென்றுள்ளேன். கும்பமேளாவில் பங்கேற்க மிக ஆர்வமாக வந்துள்ளேன். என்றார்.