இங்கிலாந்தை துவம்சம் செய்த இளம் இந்தியா; அபிஷேக் ஷர்மா சரவெடி

கோல்கட்டா: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, கேப்டன் பட்லரை (68 ரன்) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. இதனால், 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்ஷர் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


இதைத் தொடர்ந்து, 133 ரன்னுடன் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. சஞ்சு சாம்சன் 26 ரன் குவித்தார். மறு முனையில் அதிரடி காட்டிய அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 12.5 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இதன்முலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

Advertisement