சிப்காட் 'போம்' நிறுவனத்தில் தீ

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை சிப்காட்டில், மெத்தை, தலையணை, சோபா உள்ளிட்டபொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் போம் தயாரிக்கும், 'ஜாய் போம்' என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.


இங்கு,மின்கசிவால் தீ பிடித்தது. அங்கிருந்த காவலாளி, சிப்காட் போலீசார் மற்றும் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவியது. பின்னர் வந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

Advertisement