போக்சோவில் கைதான ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

காங்கேயம் அடுத்துள்ள நள்ளிமடம் அரசு பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் சிவக்குமார், 54, நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அரசு ஊழியர் விதிகளின்படி, கைதான ஆசிரியர் சிவக்குமாரை சஸ்பெண்ட் செய்து, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement