விரட்டும் ஒற்றை யானை வாகன ஓட்டிகள் அச்சம்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அஞ்செட்டி சாலை மற்றும் கிராமப்புற சாலையோரங்களில் சுற்றித்திரியும் ஒற்றை யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, கண்டகானப்பள்ளியை சேர்ந்த முனிராஜ், 52, என்பவர் தேன்கனிக்கோட்டை - பாலதொட்டனப்பள்ளி சாலையில் பைக்கில் சென்றார்.

தின்னுார் ஏரி அருகே, அங்கிருந்த ஒற்றை யானை விரட்டிய நிலையில், அவர் பைக்கில் இருந்து விழுந்தார்.

பின்னர் சுதாரித்து, மீண்டும் பைக்கில் கண்டகானப்பள்ளி கிராமத்திற்கு வேகமாக வந்து உயிர் தப்பினார்.

ஒற்றை யானை முள்பிளாட் வனப்பகுதிக்கு சென்றது.

இது போன்ற ஒற்றை யானைகளால், மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால், அவற்றை அடர்ந்த வனப்பகுதி அல்லது கர்நாடகா வனப்பகுதிக்கு விரட்ட, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement