டிராக்டர் புகுந்து ஓட்டல் தரைமட்டம்

ஆம்பூர்:ஆம்பூர் அருகே, கன்டெய்னர் லாரியும், டிராக்டரும் ஒன்றோடு ஒன்று உராய்ந்ததில், நிலை தடுமாறி டிராக்டர் ஹோட்டலுக்குள் புகுந்ததில், ஓட்டல் தரைமட்டமானது.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரிலிருந்து, வாணியம்பாடி நோக்கி நேற்று காலை, 6:00 மணி அளவில் டிராக்டர் ஒன்று சென்றது.

பின்னால், பார்சல் ஏற்றிய கன்டெய்னர் லாரி வந்தது. இரண்டும், மாதனுார் அருகே ஒன்றோடு ஒன்று உரசின.

இதில் நிலை தடுமாறிய டிராக்டர், அப்பகுதியில் சாலையோரம் இருந்த சிமென்ட் ஷீட் கூரையால் அமைத்த ஓட்டலில் புகுந்தது.

இதில் ஓட்டல் முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

அதிர்ஷ்டவசமாக ஹோட்டலில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement