இடத்தை காலி செய்ய மீனவருக்கு நோட்டீஸ்

ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம் - இலங்கை இடையே ௨௫ ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கப்பல் போக்குவரத்து துவக்குவதற்காக, ராமேஸ்வரத்தில் கட்டுமானப் பணிகள் நடக்க உள்ளது.

இதற்காக மீனவர் வீடுகளை அப்புறப்படுத்த, தமிழக கடல்சார் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.

தமிழக கடல்சார் வாரியத்திற்கு சொந்தமான நிலம் தற்போது மீனவர்களின் மீன்பிடி தளவாடப் பொருட்களை கையாளும் வீடுகளாகவும், மீன்களை தரம் பிரிக்கும் கம்பெனியாகவும் உள்ளது.

இதற்காக, கடல்சார் வாரியம் மீனவர்களிடம் நிலவரி வசூலித்தது.

இப்பகுதியில் புதிதாக துறைமுகம் அலுவலகம், பயணியர் ஓய்வறை, டிக்கெட் மற்றும் பரிசோதனை மைய கட்டடங்கள் வர உள்ளதால், நேற்று 30க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்.

Advertisement