பள்ளி, கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்

திண்டுக்கல்: திண்டுக்கல் தனியார் பள்ளி, கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

திண்டுக்கல் பழைய நீதிமன்றம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் சி.பி.எஸ்.இ.,பள்ளி, பழநி ரோடு ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி என இரு இடங்களிலும் வெடிகுண்டு இருப்பதாக பள்ளி, கல்லுாரிக்கு ஜன.20 மதியம் 3:00 மணிக்கு இமெயில் வந்தது. அதிர்ச்சியடைந்த பள்ளி, கல்லுாரி நிர்வாகத்தினர் மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எஸ்.பி., பிரதீப் தலைமையிலான போலீசார் பள்ளி,கல்லுாரியில் சோதனையில் ஈடுபட்டனர். பொய்யான தகவல் என்பது தெரிந்தது. பள்ளி, கல்லுாரிக்கு அனுப்பிய இமெயில் இரண்டும் ஒரே முகவரியை கொண்டிருந்தது. சைபர்கிரைம் போலீசார் இமெயில் அனுப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்தும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Advertisement