மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

மதுரை: மதுரையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மின் ஆற்றல் மின் சிக்கனம் மின் பாதுகாப்பு குறித்த போட்டிகளில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஓ.சி.பி.எம்., பள்ளியில் நடந்தது.

இயக்க மாவட்டச் செயலாளர் மலர்செல்வி வரவேற்றார். செயலாளர் முத்துலட்சுமி, துணைத் தலைவர் வெண்ணிலா, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, தலைமையாசிரியை மேரி முன்னிலை வகித்தனர். இயக்க முன்னாள் பொதுச்செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பேசினர். இணைச் செயலாளர்கள் ரமேஷ், காமேஷ், தீபம் மகளிர் மேம்பாட்டு இயக்க மாவட்ட செயலாளர் ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 36 பள்ளிகளை சேர்ந்த 324 மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement