மாவட்ட சிலம்ப போட்டியில் சாதனை

வாடிப்பட்டி: அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மதுரை மாவட்ட சிலம்பம் விளையாட்டுப் போட்டிகள் நாகமலை புதுக்கோட்டையில் நடந்தது.

வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி லோகபிரியா 19 வயது பிரிவில் முதலிடம், 14 வயது பிரிவில் ஹரிதர்ஷினி 2ம் இடம் பிடித்தனர். லோக பிரியா தொடர்ந்து 3 வது ஆண்டாக மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றிபெற்ற மாணவிகள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரமோகன், பாண்டியம்மாள், வனிதா ஆகியோரை தலைமை ஆசிரியர் திலகவதி, உதவி தலைமை ஆசிரியர்கள் பிரேமா, பாரதி, திலகவதி, கணினி ஆசிரியர் கார்த்திக், ஆசிரியர்கள், பாராட்டினர்.

Advertisement